வவுனியா மாவட்ட மக்களுக்கும் விரையில் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு – துறைசார் அதிகாரிகளுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, June 3rd, 2021

சுகாதார அமைச்சர் மற்றும் மாவட்டம் சார்ந்த சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி, வவுனியா மாவட்டத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் குறைபாடுகளை நிலவர்த்தி செய்தல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வவுனியா மாவட்டத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த மாவட்டத்தின் துறைசார் அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே வவுனியா சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலஞ்சென்ற பிரபல வர்த்தகரும், வவுனியா வாடி வீட்டின் ஒப்பந்தகாரருமான கதிர்காமராஜாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இரணைதீவுக்கு விஜயம் செய்து தீர்வுக்காக நிலைமைகளை நேரில் ஆராய்வேன் - டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆளுநர் தெர...
தடையை நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் கோரிக்கை!
ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஜெகனின் தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்...