பச்சிளங் குழந்தையை கைவிட்ட தாய் கைது!
யாழ். வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசுவை பெட்டிக்குள் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் தாயை இன்று (10) கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அளவெட்டியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சிசு தனக்குப் பிறக்கவில்லையென்று கணவர் சண்டையிட்டமையால், சிசுவை வீதியில் விட்டுச் சென்றதாக அத்தாய்; கூறியுள்ளார்.
சைக்கிளொன்றில் வந்தவர்கள் சிசுவை அப்பகுதியில் வைத்துவிட்டுச் சென்றிருந்தனர். சிசுவை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இத்தாயைக் கைதுசெய்துள்ளனர். குறித்த தாய் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்
Related posts:
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினூடாக தெரிவுசெய்யப்பட்ட பாடாசாலைகளுக்கு நூல்கள் வழங்கிவைப...
ரிஷாட் மற்றும் சகோதரர் கைது!
யாழில் முகமூடி கொள்ளையர்கள் துணிகர கொள்ளை - மூவர் வைத்தியசாலையில்!
|
|
|


