தடுப்பூசிகள் விற்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து விசாரணை!
Saturday, May 29th, 2021
பொரளை – கின்சி வீதியில் வீடொன்றில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகரசபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
ஒரு தடுப்பூசி 1000 ரூபா முதல் 25000 ரூபா வரையிலும் உள்நாட்டவர்களுக்கும், 100,000 ரூபா வரை வெளிநாட்டவர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவன் மீது கொதிக்கும் தேநீரை ஊற்றிய சங்கீத ஆசிரியருக்கு பிணை!
அரசாங்கம் உளவியல் யுத்தத்தில் ஈடுபடுகின்றது - இலங்கை ஆசிரியர் சேவையின் பிரதம செயலாளர் குற்றச்சாட்டு...
நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் : தண்ட பணத்தை 300 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை...
|
|
|


