தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை – ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Saturday, May 29th, 2021

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மத குருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நேற்று (28.05.2021) தொலைபேசியில் உரையாடியபோதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கான தடுப்பூசி விநியோகம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரினால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றமையை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,

முதற்கட்டமாக 50,000 தடுப்பூசிகள் யாழ் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பிரதேசங்களுக்கு அவை சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும்   தெரிவித்தார்.

ஜனாதிபதியின் குறித்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிப்புக்கள் அதிகமுள்ள பகுதிகளில் வசித்து வருகின்ற அனைத்து மதங்களின் குருமாருக்கும்  முன்னுரிமை அளிப்பது அவசியம் என்ற கருத்தையும் முன்வைத்தார்.

குறித்த கருத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

அதேவேளை, பௌத்த சாசன மத விவகார அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்கள் அவர்களும் தடுப்பூசி வழங்கும் போது பாதிப்புக்கள் அதிகமுள்ள பிரதேசத்தில் வசிக்கின்ற அனைத்து மதங்களினதும் குருமாருக்கு முன்னுரிமை அளிப்பது  தொடர்பாக அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இரயில் பயணிகள் மீதான கல்லெறித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு -  டக்ளஸ் தேவா...
நுண்கடன் விடயத்தில் பொருத்தமான வழிமுறை வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
மக்கள் விழித்தெழுவார்களாயின் விடியல் வெகு தொலைவில் இல்லை: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய முக்கிய விடயமாகும் - டக...
சர்ச்சைக்குரிய கீரிமலை இறங்குதுறை விடயத்தில்  உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா
அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்காலிக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள இழுவை வலைப் படகு உரிமையாள...