அச்சுறுத்தல்களில் இருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர சபையின் உறுப்பினர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!
Friday, May 28th, 2021
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முடக்கப்பட்டாலும் அரசாங்கத்தால் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்கள் தடையின்றி மக்களை சென்றடைய வேண்டும்.
அதற்காக எம்மை நோக்கி வருகின்ற அச்சுறுத்தல்களில் இருந்து எம்மையும் எமது சமூகத்தினையும் பாதுகாத்துக் கொண்டு, முன்னோக்கி நகர வேண்டுமே தவிர, முடங்கியிருக்க வேண்டாம் என ஈ.பி.டி.பி யாழ் மாநகர சபையின் உறுப்பினர்களுக்கு, கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கினார்.
மாநகர சபையின் செயற்பாடுகளை வினைத் திறனுடன் கொண்டு செல்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இன்று யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற போதே, கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்.பல்கலையின் நிலை குறித்து நாடாளுமன்றில் குரல் கொடுத்த எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!
தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு...
சவால்களை எதிர்கொள்பவர்களாக பெண்கள் எழுச்சி கொள்ளவேண்டும் - சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு டக்ளஸ்...
|
|
|


