கடும்காற்றினால் வவுனியாவில் பப்பாசி செய்கை அழிவு!

Wednesday, May 26th, 2021

வவுனியா ஒலுமடுப் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த பப்பாசிமரங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்றையதினம் புதன்கிழமை காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.

குறிப்பாக வவுனியா நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் வீசிய கடும்காற்று காரணமாக விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த 600 இற்கும் மேற்பட்ட பப்பாசி செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல இலட்சம் ரூபாய் அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக  விவசாயி கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது - இராஜாங்க அமை...
ஜனாதிபதி உத்தரவு - பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையை கடமையில்!
இலங்கையின் பொருளாதார மீட்சி சவாலாகவே உள்ளது - சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ...