யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரழப்பு!
Tuesday, May 25th, 2021
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மீசாலையைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார்.
பளை பிரதே செயலகத்தில் அரச உத்தியோகத்தராகப் பணியாற்றும் அவரது மகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
இந்நிலையில், அவரது தந்தை உயிரிழந்த நிலையில், சடலத்தில் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
படகுகள் எதுவும் மீள ஒப்படைக்கப்படமாட்டாது - அமைச்சர் மஹிந்த அமரவீர!
குப்பைகளை அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதியால் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு!
ஊடக நிறுவனங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி!
|
|
|


