எக்ஸாம் ஸ்ரீலங்கா என்ற பெயரிலான தொலைபேசி செயலி அறிமுகம் – கல்வி அமைச்சு தகவல்!
Monday, May 24th, 2021
அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் கொள்கைக்கு அமைய எக்ஸாம் ஸ்ரீலங்கா என்ற பெயரிலான தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது..
இந்த செயலியை பயன்படுத்தி வீட்டில் இருந்தவாறே கைத்தொலைபேசி மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் சான்றிதழ்களை உறுதிப்படுத்துதல் பெறுபேறுகளை உறுதிப்படுத்தல் உட்பட பல்வேறு சேவைகளையும் இந்த செயலியின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசின் அறிவிப்பு அமுலானது!
ஏழைகளின் கனவை நனவாக்கும் முயற்சியில் தனியார் துறைகளில் மெத்தனப்போக்கு வருந்தத்தக்கது - ஜனாதிபதி!
அடுத்த 48 மாதங்களில் யார் ஆட்சியமைத்தாலும் IMF க்கு அடிப்பணிந்தாக வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்த...
|
|
|


