மட்டக்களப்பில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் சிவப்பு வலயமாக அறிவிப்பு!
Thursday, May 20th, 2021
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகள் உட்பட 59 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் வாகரை மற்றும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா இருவர் உட்பட 4 பேரும் ஆரையம்பதி, பட்டிருப்பு, வாழைச்சேனை, கோறளைப்பற்று , ஓட்டுமாவடியில் தலா ஒருவர் உட்பட 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் சிவப்பு வலயமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
எனவே மாவட்டத்தின் தொற்று அதிகரிப்பை கருத்திற்கொண்டு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.
Related posts:
வடபகுதியில் திட்டமிட்டமுறையில் மணல் அகழப்பட்டுவருவதால் சூழலுக்குபாதிப்பு.
கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்போருக்கு புதிய சோதனை - தேசிய போக்குவரத்து மருத்துவ ஆராய்ச...
காரைதீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சம்பவம் - இதுவரை 07 சடலங்கள் மீட்பு!
|
|
|


