நடமாட்டக் கட்டுப்பாடு தினங்களில் பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்படும்!
Wednesday, May 19th, 2021
நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், மூடப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள், மீண்டும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படவுள்ளன.
இதனையடுத்து, மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை மீள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்படவுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அதிகமாக பணம் அறவிட்டால் பேருந்து நடத்துனர்களது அனுமதிப்பத்திரம் இரத்து!
பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த இலங்கை நட...
ஈரானின் அணு ஆயுத நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் திட்டம் - அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் தகவல்!
|
|
|


