நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!
Friday, May 14th, 2021
சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று வெள்ளிக்கிழமை சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மாவட்டத்திலும், 100 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் அதிக மழை பெய்ய காரணம் தொடர்பில் நாசா வெளியிட்ட தகவல்!
தற்போதைய சூழலில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது - சுகாதார அமைச்சு...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு வெளியாகும் ...
|
|
|


