கிளிநொச்சியில் வறுமை மாவட்டமாக இருப்பது ஏன்? – உண்மையை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, May 1st, 2021

அரசியல் தலைமைகளின் செயற்றிறன் இன்மையே கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலைக்கு காரணம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (01.05.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலை தொடர்பாக ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர், கணிசமானளவு விவசாயத்தினை மையப்படுத்திய கிளிநொச்சி மாவட்டத்தில், திட்டமிடப்பட்ட வகையில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையே வறுமை தொடர்வதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், யுத்தம் நிறைவடைந்து பன்னிரண்டு வருடங்களாகின்ற நிலையில், அதிகாரத்தினை பெற்றுக்கொண்ட அரசியல் தலைமைகள் விவசாயத்தினை விருத்தி செய்து வறுமை ஒழிப்பது தொடர்பான சாத்தியங்களை பற்றி ய அக்கறையின்றி, மக்களை உசுப்பேற்றி தவறாக வழிநடத்துவதில் ஆர்வம் செலுத்தியமையே வறுமை நீடிப்பதற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், தற்போது விவசாய நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கான ஏதுநிலைகள் தொடர்பாக கவனம் செலுத்துதல் மற்றும் அறுவடைகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல் போன்ற முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தை மக்கள் இனியும் தவறவிடக் கூடாது - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரி...
டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை முதல் மூளாய் -அச்சுவேலிக்கான தனியார் சிற்றூ...
புலி சீருடை விவகாரம் - பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் - இளைஞனின் பெற்றோரிடம் அமைச்ச...