எதிர்வரும் திங்கள்முதல் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்படும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
Friday, April 30th, 2021
பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பணியாளர்களின் வருகை என்பன குறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இன்றையதினம் பேருந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் வார இறுதி நாட்களில் குறைந்த அளவிலான பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாழ்க்கை செலவு குழு நாளை கூடுகின்றது - பால்மா விலை நிர்ணயம் தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் வெளியாக...
வருமானம் கிடைக்கக்கூடிய திட்டங்களை செயற்படுத்தி பிரதேசத்தின் நலன்களை வலுப்படுத்த வலி மேற்கு பிரதேச ச...
250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் - தேர்தல்கள்...
|
|
|


