இராணுவத்தினரால் யாழ். நகரப்பகுதியில் கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுப்பு!

Thursday, April 22nd, 2021

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நகரின் பஸார் வீதிப் பகுதி இராணுவத்தினரால் நீரூற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடு இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தின் 51-வது படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டலில் 512 ஆவது படைப்பிரிவினரால் குறித்த செயற்பாடு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண நவீன சந்தை பஜார் வீதி நீர் ஊற்றி கழுவ பட்டதோடு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.

நகரப்பகுதியினை சுத்தமாக்கும் செயற்பாட்டில் இராணுவத்தின் 51 ஆவது படையணியின் தளபதி மற்றும் 512 ஆவது படைப்பிரிவின் தளபதி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு கறித்த சுகாதார செயற்பாட்டை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க இவ்வாரம் வவுனியா விஜயம் - தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை சந்த...
திரவ எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவு தேசிய கணக்காய்வு அலுவலகம...
கடந்த காலங்களில் மக்களின் ஆணையை பெற்று என்ன செய்தீர்கள்? – தமிழ் பொது வேட்பாளர் குறித்து ஈ.பி.டி.பிய...