திருநெல்வேலி – பாரதிபுரம் தொடர்ந்தும் அபாயத்தில்!
Wednesday, April 21st, 2021
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து முடக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி – பாரதிபுரம் கிராமத்தில் மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இறுதியாக 643 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடமாகாணத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் திருநெல்வேலி – பாரதிபுரம் கிராமத்தில் 5 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
மேலும் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களை சேர்ந்தவர்கள் எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமுர்த்தி பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் - அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க!
கூட்டமைப்பிற்கு வாக்களித்து ஏமாந்ததை விட கிடைத்த பலன் என்ன? – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வ...
யாழ் போதனா வைத்தியசாலையில் நடப்பது என்ன? - வைத்திய நிபுணர் ஒருவர் திடீர் இடமாற்றம் – குழப்பத்தில் வை...
|
|
|


