இரண்டாம் கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் நாளை இறுதி முடிவு!
Sunday, April 18th, 2021
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கொவிட் 19 தடுப்பூசியினை 10 வாரங்களிலா அல்லது 12 வாரங்களிலா செலுத்துவது என்பது தொடர்பில் நாளையதினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழு தொற்று நோய் தடுப்பு பிரிவில் நாளை (19) பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள நிலையில் அது தொடர்பான தீர்மானத்தினை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரையில் நாட்டில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உலர் பழவகை ஏற்றுமதி தொடர்பில் இத்தாலியுடன் ஒப்பந்தம்!
பேலியகொடை மெனிங் சந்தை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பம் - நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
உள்ளூராட்சித் தேர்தலுக்கு இலவச அஞ்சல் வசதிகள் - சுற்றுநிருபம் வெளியிடப்பட்டதாக பிரதி அஞ்சல் மாஅதிபதி...
|
|
|


