27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்ப்பு!

Thursday, April 15th, 2021

27 பொருட்களுக்கு சதொச நிறுவனம் வழங்கி வரும் சலுகையை மேலும் சில மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடைமுறையை மேலும் மூன்று மாதங்களுக்கு அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் சதொச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

நுகர்வோரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருவதால் நுகர்வோரை ஏனைய வியாபாரிகளால் ஏமாற்றுவதற்கு ஏமாற்ற முடியவில்லை.

சந்தையின் தீர்மானமிக்க சக்தியாக சதொச நிறுவனம் செயற்படுகின்றது. அத்துடன் சலுகைப் பொதிக்கு பாரிய கிராக்கி நிலவுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் காலத்தை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டமை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமையும் என பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கடந்தகால அனுபவங்களை பாடமாக கொண்டு இனிவருங் காலத்தை வெற்றிகொள்வோம் - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை ...
செனல் 4 காணொளி விவகாரம் - பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பின்னர் முறைப்பாடு - இராஜாங்க அமைச்சர் சிவநே...
மக்களின் வாழ்வாதார போராட்டத்துக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாக...