11 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை – வெளியானது விசேட வர்த்தமானி!

Wednesday, April 14th, 2021

11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமைய குறித்த அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தார்.

இதையடுத்து இன்று அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.

ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாஅத், சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா, தாருல் அதர்-ஜம்உல் அதர் சிறிலங்கா இஸ்லாமிய மாணவர் சங்கம் – ஜமியா ஐஎஸ் அமைப்பு, அல்கொய்தா, சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு, சுப்பர் முஸ்லிம் அமைப்பு என்பன அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து - தேசிய போக்குவரத்து ஆண...
மக்களின் அபிவிருத்திகளை முடக்கும் நோக்குடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் செய்கின்றனர் – ஈ.பி...
அமைச்சர் டக்ளஸ் 100 மில்லியன் ஒதுக்கீடு - திட்டங்களை இறுதி செய்வதற்கு பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்...