திருடர்களால் முதியவர் ஒருவர் கொடூரமாக கொலை – கொடிகாம் அல்லாரை பகதியில் சம்பவம்!
Monday, April 12th, 2021
தென்மராட்சி பிரதேசத்தில் தீருடச் சென்ற கும்பலினால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொடிகாம் அல்லாரை பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் 3 பேர் கொண்ட கொள்ளையர்களால் குறித்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது..
திருடச் சென்ற குறித்த கொள்ளையர்கள் வயோதிப தம்பதியை கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதன்போது 72 வயதான சிவராசா என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
சத்தம் கேட்டு அயலிலுள்ள இளைஞர்கள் சிலர் சம்பவ வீட்டுக்கு சென்ற வேளையில், கொள்ளையர்கள் அங்கிருந்த ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊடகவியலாளர் லசந்தவின் சடலத்தை தோண்ட நீதிமன்றம் உத்தரவு.!
நாட்டின் பொருளாதார நெருக்கடி மிக மிக மோசமான நிலையில் நாட்டு மக்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ விளங்கிக...
இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்" குழு யாழ் வருகை!
|
|
|


