உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை ஜானதிபதியிடம் கையளிப்பு!
Tuesday, April 6th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப் பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக் கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 15 ஆம் திகதி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப் படைக்கப்படவிருந்த நிலையில், மேலதிக பரிசீலனைக்காக அமைச் சரவை குழு இரண்டு வார கால அவகாசத்தினை பெற்றிருந்தது.
இதற்கமைய குறித்த அறிக்கை நேற்று மாலை ஜனாதிபதியிடம் கைய ளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரி குப்த ரோஹணதீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலை பாடவிதானத்தில் இருந்து வரலாற்றுப் பாடத்தை நீக்குவதற்கு எந்த தீர்மானமும் இல்லை - தேசிய கல்வி ...
தீர்வு வழங்காவிடின் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு!
போதைப்பொருள் பயன்பாடு - இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பு!
|
|
|
ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம் - ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க அறிவி...
சகல பாடசாலைகளுக்கும் இன்றுமுதல் வழமைக்கு திரும்பியது - பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளர...
மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கானதாக பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்...


