1000 ரூபா நாட்சம்பளம் – பெருந்தோட்ட நிறுவனங்களின் கோரிக்கை நிராகரிப்பு!
Monday, April 5th, 2021
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியை வலுவற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை விதிக்குமாறு கோரப்பட்ட போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்தது.
இந்த மனுமீதான மேலதிக விசாரணைகளுக்கு எதிர்வரும் மே மாதம் 5ஆம் மற்றும் 17ஆம் திகதிகளை குறித்தொதுக்கி வழக்கினை நீதிமன்றம் பிற்போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காலநிலை மாற்றம் தொடர்பில் அச்சம் – ஐ.நா சபை அறிக்கை!
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கு பொதுமக்கள...
தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தின் வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது - காற்று வீசக்கூடும்...
|
|
|
எந்தவொரு நாட்டுக்கும் தனியாக முன்னேற முடியாது - இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதே நோக்கமாகும...
கடனைச் செலுத்தக்கூடிய நாடு என்பதை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பேச்சுக்கள் ஜூலைக்குள் நிறைவு செ...
மோட்டார் வாகன இறக்குமதி - சுங்க இறக்குமதி வரி மீதான 50% கூடுதல் வசூலிப்பு டிசம்பர் 31வரை நீடிப்பு!


