வடமாகாணத்தில் கண்புரை சத்திர சிகிச்சை முகாம்களை 3 கட்டங்களாக நடத்துவதற்கு ஏற்பாடு !
Saturday, March 27th, 2021
எதிர்வரும் மே மாதமளவில் வடமாகாண சுகாதாரத் திணைக்களமும், யாழ்.போதனா வைத்தியசாலையும் இணைந்து கண்புரை சத்திர சிகிச்சை முகாம்களை 3 கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கண்புரை நோயால் அவதியுறும் நோயாளர்கள் தத்தமது பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் மாவட்டப் பொது வைத்தியசாலைகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, மாங்குளம், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைகளில் அல்லது யாழ் போதனா வைத்தியசாலையில் பதிவுகளை மேற்கொள்ளவதன் மூலம் கண்புரை சத்திரசிகிச்சையினை செய்துகொள்ள முடியும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Related posts:
கல்வி நிர்வாகசேவை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி!
சாவகச்சேரியில் மூன்று வீடுகளில் 20 பவுண் தங்க நகைகள் கொள்ளை!
இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு - வர்த்தக அமைச்சர் பந்துல ...
|
|
|


