வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசம் கட்டாயம் – பிரதி பொலிஸ் மாஅதிபர் வலியுறுத்து!
Friday, March 26th, 2021
தமிழ் , சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டல்களை அவசியம் கடைப்பிடிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.
கொவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கொவிட்-19 வைரஸ் தொற்று இன்னும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், தமிழ் -சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பேணுவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மியன்மார் தேர்தல் அதிகாரிகள் கைது மிகவும் கண்டிக்கத்தக்கது - இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிக்கை!
இன்றுமுதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
பூர்த்தி செய்ய முடியாத அனைத்து வீடுகளையும் கட்டி முடிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை...
|
|
|


