மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை – பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ்!

Thursday, March 25th, 2021

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11,13 தர வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்துள்ளர்.

அத்துடன் இதற்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்து மூலமான அனுமதி கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன் நாடு முழுவதிலும் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறும் என்று குறிப்பிட்ட அமைச்சரிடம் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியுண்டா? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை. தனியார் பாடசாலைகள் சர்வதேச பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலைக்கான சித்திரை விடுமுறை தொடர்பில் குறிப்பிடுகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மேல் மாகாணத்தில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கொரோனா தொற்று : சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அன...
தனியார் நிறுவனங்கள் தாம் நினைத்தவாறு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்ககொள்ள முடியாது - இராஜாங்க அமைச்சர் ...
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி   - இலங்கைக்கு வரிக் கடிதமொன்றை அனுப்பிய...