அறுவடை இடம்பெறும் விவசாய நிலங்களுக்குச் சென்று நெல் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம்!
Sunday, March 7th, 2021
பயிர் நிலங்களுக்குச் சென்று நெல் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பமாகவுள்ளதாக விவசாய அமைச்சர் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அதேநேரம் குறித்த வேலைத்திட்டம் அடுத்த மாதம் 7ஆம் திகதிவரை இந்த நிகழ்ச்சித் திட்;டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் 2 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமே அனுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, பொலநறுவை, ஹம்பாந்தோட்ட, குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமூக அக்கறையுடன் ஒன்றுதிரண்டால் வேலணை பிரதேசத்தை இதர சபைகளுக்கு முன்னுதாரணமானதாக மாற்றியமைக்க முடியு...
எங்களால் முடியும் என்பதை முடியும் என்றே கூறுவோம் – பருத்தித்துறையில் நாமல் எம்.பி. (வீடியோ இணைப்பு)
சட்டவிரோத ஆள் கடத்தலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - நீதி அமைச்சர் தகவல்!
|
|
|


