புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வற்கு 35 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு!

Wednesday, March 3rd, 2021

புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு 35 குழுக்கள் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த விண்ணப்பங்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் குழுவிற்கு அனுப்பப்படும் என ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்தள்ளார்.

இதேநேரம் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகள் நேற்றுடன் (02) முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

இந்தியாவில் வாழும் ஈழ அகதிகள் வாக்களிக்கக் கோரினால் பரிசீலிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப...
நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள சில விடயதானங்களை நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கும் வகையிலா...
உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான வாய்மூல கருத்துக் கோரல்கள் இன்று - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்கு...