பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்த மறு அறிவித்தல் வரை தடை – கல்வி அமைச்சு!
Tuesday, February 16th, 2021
பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே இவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மீள் அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் கல்வியமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
அடையாளம் காணப்படாத நிலையில் பெரும் எண்ணிக்கையிலான சடலங்கள்!
எரிபொருள் வீண் விரயத்தை கட்டுப்படுத்த புதிய எரிபொருள் கட்டமைப்பு - பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ ...
இணைய வசதியை இலங்கைக்கு கொண்டுவந்த மகிந்த ராஜபக்சவை ” மைனா ” என்கிறார்கள் – நாமல் ஆதங்கம்!
|
|
|


