பிளாஸ்ரிக் அர்ச்சனை தட்டுகளுக்கு தடை!
Friday, August 5th, 2016
நல்லூர் ஆலய மஹோற்சவத்தில், கடைகளில் பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுக்ளுக்குப் பதிலாக, பனையோலையில் தயாரிக்கப்பட்ட அர்ச்சனைத் தட்டுகளே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அவற்றை, மாவட்ட மகளிர் அமைப்புக்கள் ஊடாகவும் பனைசார் உற்பத்தியாளர்களிடமிருந்தும், குறைந்த விலைகளில் வியாபாரிகள் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேற்படி திருவிழாக் காலத்தில், 20 மைக்றோனுக்குக் குறைவான பொலித்தீன் பாவனை, உக்காத பொருட்களின் பாவனை என்பவற்றுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது
Related posts:
இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பில்லை - சோபா தொடர்பில் அமெரிக்க தூதுவர்!
விபத்துக்களினால் நாளாந்தம் இறப்போரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!
வடக்கின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பு - நோயாளர்கள் அவதி!
|
|
|


