ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் சிவஞானசோதி நியமிப்பு!
Monday, February 8th, 2021
சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக வே.சிவஞானசோதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் முன்னர் அமைக்கப்பட்ட மனித உரிமை தொடர்பான ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து அரசாங்க கொள்கைக்கு அமைவாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளுதல் இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் செயலாளராக கடமையாற்றிய வே. சிவஞானசோதி இந்த ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றி வருகின்றார். இந்த ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் உள்ளடங்கலாக 3 உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அமெரிக்க கப்பலில் இலங்கை கடற்படையினர்!
கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வாழ்க்கை செலவு குழுவிடம் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி...
தற்போதுள்ள மக்களுக்கு அடுத்த 25 வருடங்களில் நாடு எப்படி இருக்கும் என்பது தேவையில்லை - நாடாளுமன்ற உறு...
|
|
|


