ரயிலில் மோதி நபரொருவர் பலி – அரியாலையில் சோகம்!
Sunday, February 7th, 2021
யாழ்ப்பாணம் அரியாலையில் ரயிலில் மோதி நபரொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த சம்பவம், இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்களிலில் சென்றுகொண்டிருந்த குறித்த நபர், பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போதே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் என்ற 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
புனர்வாழ்விற்கு பெயர் குறிப்பிடப்பட்ட இரு அரசியல் கைதிகளுக்கு தண்டணை!
இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் எக்காலத்திலும் தீர்வைப் பெற முடியாது - பிரதமர் தினேஷ் குணவர்த்தன வல...
131 பட்டப்படிப்புகளுக்கு வட்டியில்லா கடன் - விண்ணப்பங்கள் கோரல்!
|
|
|


