அரசியல் பழிவாங்கல்கள் குறித்த பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு விஷேட குழு நியமனம்!
Sunday, January 31st, 2021
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு மூவர் அடங்கிய விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு தொடர்பான விபரம் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக்க பிரியந்த சமரகோன் ஜயவர்தன, ஹேமா குமுதினி மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரத்னபிரிய குருசிங்க ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் உலகின் முதல்தர நட்சத்திர விடுதிகள்!
பல கோடி கோழிகள் வருடாந்தம் இறைச்சிக்காகக் கொலை!
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - கண்டாவளை ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் நீண்டநாள் போக்குவரத்து சேவை...
|
|
|


