இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 40 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சி — சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி வீரசூரிய சுட்டிக்காட்டு!
Saturday, January 30th, 2021
கொரோனா தொற்றுக் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 40 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையினால் இந்த வருமான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 45 தொடக்கம் 80 மில்லியன் ரூபாவிற்கிடையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளதுடன் தற்போது 4500 ற்கும் மேற்பட்ட இ.போ.ச பேருந்துக்ள சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நடவடிக்கை பிரிவு அதிகாரி வீரசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விரைவில் மயிலிட்டி துறைமுகம் மக்கள் பாவனைக்கு விடப்படும் - மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க!
கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அலகப...
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கவில்லை - சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர்!
|
|
|
கீதாவின் பாராளுமன்ற இரத்து விவகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தம் செ...
இலங்கையின் இறைமைக்கு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்...
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சகல அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும் - மத்திய வங்கியின் முன்னாள...


