செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் – சாதகமான பதில் பெற்றுத்தரப்படும் என ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுதி!

Friday, January 29th, 2021

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் சிவகரனின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்றையதினம் பிரதேச சபையின் முன்றலில் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான  குலசிங்கம் திலீபன் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் மக்களது விருப்புகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது போராட்டத்திலீடுபட்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனிடம் அரசியல் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட பிரதேச செயலரின் இடமாற்றத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்து ஆலோசித்து சாதகமான ஒரு தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் போராட்டகாரருக்கு உறுதியளித்த நாபடாளுமன்ற உறுப்பினர் திலீபன் போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடதக்கது.

Related posts:

சுற்றறிக்கையை மீறி நிதி சேகரிக்கும் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - கல்வி அமைச்சு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை - பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள் புதிய முதலீடு...
சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சி - சுற்றுலா வலயங்களுக்கு நேரடியாக விஜயம் செய்யும் ஜனா...

சமூக வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு தொடர்பில் ஆசிரிய சமூகம் தெளிவுபடுத்த வேண்டும்.–தவநாதன்
கொரோனாத் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் திங்கள்முதல் நாடுமுழுவதும் இறுக்கமான நடைமுறை - இராணுவத் ...
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவிற்காக,...