பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Friday, January 29th, 2021

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளுக்கு அடுத்த மாதம் முதல் விலை அதிகரிப்பை மேற்கொள்ளப் போவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ள நிலையில் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளுக்கு வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மேற்படி வரிவிதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்குமானால் விலை அதிகரிப்பை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

விவசாய நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈர்க்க அதிரடி நடவடிக்கை - அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் ஆயிரம் மில்லி...
தொடர்ச்சியான இரத்து மற்றும் தாமதங்கள் - பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு...
யாழில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் பணிகள் முன்னெடுப்...