துறைமுக தொழிற்சங்கத்தினால் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!
Friday, January 29th, 2021
துறைமுக தொழிற்சங்கம் இன்று மதியம் 12 மணி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உடன்படிக்கையில் நூறு வீதம் உரிமம் துறைமுக அதிகார சபைக்கு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் 23 துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூடி கிழக்கு முனையத்தின் உரிமையை 100 சதவீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் இல்லாவிடின் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
Related posts:
எரிபொருள் நிரப்பும் நிலையம் மூடப்பட்டிருந்ததால் உடன் அறிவிக்கவும் !
மேலும் 4 புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை – நெடுஞ்சாலைகள் அமைச்னரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகா...
கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதி!
|
|
|


