யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படுகிறது வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்து நிலையம்!
Sunday, January 24th, 2021
யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைக்கப்படுள்ள நெடுந்தூர தனியார் பேருந்து நிலையம் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
வெளிமாவட்டங்களிற்கு செல்லும் தனியார் பேருந்துகள் தரித்து நிற்பதற்கு உரிய இடம் இல்லாமல் இருந்துவந்த நிலையில் அதனை நிவர்த்தி செய்யும்வகையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில வருடங்களாக மின்சார நிலைய வீதியின் வைத்தியசாலை பின் பகுதியிலேயே வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்துகள் தரித்திருந்து சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கம் - ஜனாதிபதி சந்திப்பு!
சீனா நன்கொடையாக வழங்கிய மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன!
தமிழ் மக்களின் உணர்வுகளுடன் அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை தேசிய மக்கள் சக்தி கைவிடவேண்டும் - நாடாளும...
|
|
|


