விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை – சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலாத்துறை எச்சரிக்கை!
Thursday, January 21st, 2021
சுற்றுலாப் பயணிகள் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சுற்றுலாத்துறையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமாக இன்றையதினம் சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதிகளுக்குள் சுற்றுலாத்துறையை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொவிட் தொற்று நிலைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால் பயண முகவர் நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடும்!
வாக்களிக்கும் போது அவதானத்தில் கொள்க - தேர்தல்கள் ஆணையாளர்!
நாடாளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி!
|
|
|
வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்ள உதவுங்கள் - இலங்கையின் செல்வந்தர்களிடம் இராஜாங்க...
எரிபொருள் பெற்றுக் கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்க...
துப்பாக்கியை அபகரித்தவர்களால் வன்முறைகள் மோசமாக வாய்ப்பு - அவதானமாக இருக்குமாறு மக்களிடம் பாதுகாப்பு...


