வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, January 20th, 2021

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் – ‘வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும்சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சிறைக் கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்க ஜனாதிபதியின் அனுமதிக்கு காத்திருப்பதாக இராஜாங...
அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை, வெகுவிரைவில் நிறைவேற்ற வேண்டும் - சர்வகட்சிக் கூட்டத்தில்...
இந்திய - இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை - தமிழ்நாடு...