தொடரும் கனமழை – யாழ்மாவட்டத்தில் 1047 பேர் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் அறிவிப்பு!
Wednesday, January 13th, 2021
தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 358 குடும்பத்தை சேர்ந்த 1047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நேற்று காலையிலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழையின் தாக்கத்தின் காரணமாக 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் குடாநாட்டில் தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மே 11 இல் பல்கலைக்கழக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் - பல்கலை மானிய ஆணைக்குழு!
மாணவர்களின் பரீட்சையை குழப்பும் ஹர்த்தால் எதற்கு? – நாளை பரீட்சைகள் நடைபெற வேண்டும் என பொற்றோர் வலிய...
நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகள் குறைப்பு!
|
|
|


