இலங்கையில் புதியவகை வீரியம்கூடிய கொரோனா அடையாளம் – துரித நடவடிக்கையில் சுகாதார பிரிவு!

Wednesday, January 13th, 2021

பிரித்தானியா மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை வீரியம் கூடிய கொரோனா தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார சேவைகள் பிரதி இயக்குநர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பிசிஆர் சோதனையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுமக்களை இது குறித்து தேவையற்ற அச்சத்திற்குள்ளாகவேண்டியதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பொதுமக்களும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில், அவதானம் செலுத்த வேண்டும் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ...
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர...
நயினாதீவுக்கு பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!