தொழிலாளர் செயலகத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு தொழில் ஆணையாளர் நாயகம் பிரபா சந்திரகீர்த்தி பொதுமக்களிடம் கோரிக்கை !
Monday, January 11th, 2021
கொழும்பு நாரஹென்பிட்டி தொழிலாளர் செயலகத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபா சந்திரகீர்த்தி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், அதற்கான விண்ணப் பப்படிவங்களை ஒப்படைப்பதற்காகவும் கொழும்பு நாரஹென்பிட்டி தொழிலாளர் செயலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் தொழில் ஆணையாளர் நாயகம் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக் காரணமாகக் கூடுதலான மக்கள் பிரதான அலுவலகத்திற்கு வருவதைத் தடுக்கும் நோக்கமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் கொடுப்பனவுகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நாடு பூராகவும் உள்ள மாவட்ட மற்றும் வலய அலுவலகங்களில் மேற்கொள்ள ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு - இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீ...
கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நாளை ஆரம்பம் - வினாப் பத்திரங்கள் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு ...
வடக்கு மாகாண ஆளுநரின் உழவர் திருநாள் வாழ்த்துச் செய்தி!
|
|
|
கடந்த காலங்களில் கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட பெரும்பணிகள் அனைத்தும் இருட்டடிப...
16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு - பொதுமக்கள...
நாடாளுமன்றத்தின் பெண் ஊழியர்கள் அனைவரும் சேலை அணிந்து பணிக்கு வருவது கட்டாயம் வேண்டும் என அறிவிப்பு!


