அரசியல் கூட்டங்களுக்கு மைதானங்கள் கிடையாது!
Thursday, August 4th, 2016
கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள 23 பொது மைதானங்களில் புனர்நிர்மாணம் காரணமாக அரசியல் கூட்டங்களை நடத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. என கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.
ஹைட்பாக் கோனர், மாளிகாவத்த சிறிசேன மைதானம், ரட்ணம் மைதானம், நவகம்புர மைதானம் உள்ளிட்ட மைதானங்களே புனரமைப்பு செய்யப்படவுள்ளன. இதில் ஹைட்பார் கோனர், கால்பந்தாட்ட தொகுதியாக மாற்றப்படவுள்ளது.
ஏற்கனவே இந்த மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றபோதும் அரசியல் கூட்டங்களை நடத்த ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அது மக்கள் பாவனையில் இருந்து தவிர்க்கப்பட்டதாக கொழும்பு மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
கொட்டகலையில் இரத்ததான நிகழ்வு
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம்!
2% வாக்குகளை பெறமுடியாத வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாகப்படும் - PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப்...
|
|
|


