பிசிஆர் பரிசோதனைக்கு மறுத்த யாழ் நகர வர்த்த நிலையம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டது!

Saturday, January 9th, 2021

யாழ் நகர் நடைபாதை அங்காடியில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வர்த்தக நிலையம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகநிலையம் இன்று யாழ் மாநகர சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அங்கு கடமையாற்றும் 3 ஊழியர்களும் குடும்பத்துடன் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கடந்த வாரம் யாழ்ப்பாண நகர நடைபாதை அங்காடி வர்த்தகர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் குறித்த வர்த்தக நிலையத்தில் உள்ளவர்கள் பிசி ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காததனால் இன்றையதினம் அவர்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உப்படுத்தப்பட்டுள்ளனர்.

000

Related posts:

இலங்கைக்கான நியூசிலாந்தின் வதிவிட உயர் ஸ்தானிகருக்கும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சருக...
இலங்கை விவசாயிகள் , பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் நியூசிலாந்து அரசாங்கத்தின...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அவசரமாக சமர்ப்பிக்கப்படாது - அரசாங்கம் பகிரங்க அறிவிப்பு!