5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்றுமுதல் ஆரம்பம்!

Monday, January 4th, 2021

சௌபாக்கிய தொலைநோக்கு கொள்ளை பிரகடனத்திற்கு அமைய நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாக 3 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஒருகொடவத்தை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பிக்கப்பட்டதாக மாநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், மாநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கமைய இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

முதல்கட்டத்தின் கீழ் குறித்த வீட்டுத்திட்டம் கொழும்பு மாவட்டத்தின் ஒருகொடவத்தை, புளுமென்டல், மாலம்பே, மாகும்புர, பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேநேரம், கம்பஹா மாவட்டத்தின் பெஹலியகொடை பிரதேசத்திலும் கண்டி மாவட்டத்தின் கெடம்பே பிரதேசத்திலும் இந்த வீடமைப்பு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வடக்கில் எந்தவொரு திட்டமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விருப்பத்திற்கு மாறாக முன்னெடுக்கப்படாது -...
வேகமாக பரவிவரும் கொரோனா வைரசின் புதியமாறுபாடு - எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் ...
சேவையில் இருந்து நீக்கப்பட்ட எழுநூறு பேருந்துகளை ஏலம் விடுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!

ஆசிரியர் - அதிபர்களின் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு - அமைச்சர் கெஹேலிய...
அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் பயணிகள் படகு சேவை - இந்திய அரசுடன் கலந்துரையாடல் ந...
பறிக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – மே நாளில் யாழ் நகரின் முன்னா...