ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் நல்லூர் பிரதேச சபையையும் கைப்பற்றியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி – புதிய தவிசாளராக மயூரன் தெரிவு!

Wednesday, December 30th, 2020

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி மதுசூதனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பத்மநாதன் மயூரனும் முன்மொழியப்பட்டனர்.

தொடர்ந்து சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

அதன்படி பகிரங்க வாக்களிப்பில் குமாரசாமி மதுசூதனன் 08 வாக்குகளையும் பத்மநாதன் மயூரன் 10 வாக்குகளையும் பெற்றனர். அதன் அடிப்படையில் புதிய தவிசாளராக பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கசப்பான மறக்க முடியாத அனுபவம் உள்ளதால் எதனையும் அலட்சியப்படுத்த முடியாது - தாக்குதல் நடத்தப்படவுள்ள...
எதிர்வரும் டிசம்பர் மாதம் உயர்த பரீட்சையை நடத்த முடியும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்...
அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன் - மாணவர்களின் நலன் கருதியே பதவி விலகினேன் - ஷேக் ஹசீனா தெரிவ...