ஒதுக்கப்பட்ட நிதியை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யுங்கள் – அனைத்து அரச நிறுவனங்களிடமும் நிதி அமைச்சு, வலியுறுத்து!
Sunday, December 27th, 2020
வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உரிய வகையில் முகாமைத்துவம் செய்யுமாறு நிதி அமைச்சு, அனைத்து அரச நிறுவனங்களையும் வலியுறுத்தியுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் S.R. ஆட்டிகலவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் மேலதிகமாக நிதியை ஒதுக்க முடியாது என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கவனத்திற் கொள்ளாது, மேலதிகமாக நிதி செலவிடப்படுமாயின் அதற்கான முழுமையான பொறுப்பினை அந்தந்த நிறுவனங்களே ஏற்க வேண்டும் எனவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வெளிநாடு பயணம் திட்டமிடப்பட்ட செயல் - கபே அமைப்பு குற்றச்சாட்டு!
சீன பாதுகாப்பு ஆலோசகருடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
நாட்டை வந்தடையவுள்ள இரு எரிவாயு தாங்கிய கப்பல்கள்!
|
|
|


