மாமனாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Sunday, December 27th, 2020
தனது மாமனாரான அமரர் செல்லத்துரை கணேசரட்ணம் அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி தனது இறுதி அஞ்வலி மரியாதையை செலுத்தியுள்ளார்.
வயது மூப்பின் காரணமாக அமரர் செல்லத்துரை கணேசரட்ணம் அவர்கள் நேற்றையதினம் காலமானார்.
இந்நிலையில் அன்னாரின் இல்லத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன் கிரிகைகளிலும் சக தோழர்கள் சகிதம் கலந்துகொண்டார்..
அமரர் கணேசரட்ணம் அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியா பயணிக்கிறார் பிரதமர் !
நவீன உலகிற்கு ஏற்றவகையில் சட்டங்கள் வகுக்கப்படும் - பிரதமர்!
மியன்மாரில் 15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு!
|
|
|







