தேசிய கல்வியற் கல்லூரி படிப்பை முடித்த ஆசிரிய மாணவர்களது விவரம் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளது!
Thursday, December 17th, 2020
2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் படிப்புகளை முடித்த ஆசிரிய மாணவர்களுக்கு பொருத்தமான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் பொருட்டு இணையத்தின் ஊடாக தகவல்களைப் பெறும் திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.
அதன்படி, www.ncoe.moe.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் ஆசிரிய மாணவர்கள் தங்கள் தகவல்களை வழங்கலாம் என கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த தகவல்களை வழங்குவதற்கான இறுதித் திகதி எதிர்வரும் வரும் டிசெம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டுப்பாட்டில் மிஹின் லங்கா!
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ...
காட்டிக் கொடுக்கும் பரவணி பண்பியல்பின் தொடர்ச்சியே முன்னணியின் தமிழக விஜயம் - ஈ.பி.டி.பி. குற்றச்சாட...
|
|
|


