அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள விசேட அறிக்கை!
Tuesday, December 8th, 2020
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது.
மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த விசாரணை அறிக்கை 2 ஆயிரம் பக்கங்களை கொண்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட 198 முறைப்பாடுகளின் விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மோசடிகளை தடுக்க தபாலகத்தில் ஸ்கான் இயந்திரம்!
தடை செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தால் கைது நடவடிக்கை தொடரும் - அமைச்சர் சரத் வீரசேகர எச...
யாழ் - சிறைச்சாலையில் புனரமைப்பு செய்யப்பட்ட கலந்துரையாடல் மண்டபம் சிறைச்சாலை ஆணையாளரால் திறந்துவைப்...
|
|
|


