பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Monday, November 23rd, 2020
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் மூன்றாவது தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
ஆனாலும் பல பிரதேசங்களில் மாணவர்களின் வருகை குறைந்தளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த பதிவுகளை இணையம் (Online) ஊடாக மாத்திரமே மேற்கொள்ள முடியுமெனவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன் 2019-2020 புதிய கல்வியாண்டிற்காக 41,500 மாணவர்கள் வரையில் உள்வாங்குவதற்கு எதிர்பாரப்பதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
HIV ஆபத்தில் உள்ளவர்களுக்கு அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை அறிமுகம் - தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாட...
வடக்கில் சுகாதார சேவையில் நிலவும் ஆளணியை நிரப்ப சுகாதார அமைச்சின் செயலர் சாதகமான பதில் – வடக்கின் சு...
மின்வெட்டு அபாயம் அதிகரிப்பு - மின்சாரப் பற்றாக்குறை குறித்து எச்சரிக்கை!
|
|
|


